மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று திடீரென சுகாதாரத் துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஜைகா திட்டம் குறித்து முதல்வர் சங்குமணியிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
பின்னர் அண்ணா நிலையம் அருகே உள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவு மற்றும் முடநீக்கியல் பிரிவு ஆகியவற்றில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை (TAEI) பிரிவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சீரமைப்பு பணிகள், மற்றும் கட்டிட அமைப்பு குறித்தும் பீலா ராஜேஷ் கேட்டறிந்தார்.
மேலும், மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள உணவு பாதுகாப்பு துறைக்கு கீழ் இயங்கும் உணவு தர ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் புதிதாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த உணவு தர ஆய்வகத்தினை எங்கு அமைப்பது என்பது குறித்தும் அதற்கான இடத்தை தேர்வு செய்யவும் தோப்பூர் அருகே ஆய்வு செய்தார்.
மதுரை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலர்! இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் முதல்வர் சங்குமணி, நிலைய மருத்துவர் ஸ்ரீலதா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க...அதிரடி காட்டும் ஜெகன் அரசு: ஆந்திராவில் திஷா சட்டம் நிறைவேற்றம்!