தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

By

Published : Jan 6, 2021, 7:41 PM IST

பொங்கல் பண்டிகயையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் இந்தாண்டு மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலர் கோபால் அரசாணை வெளியிட்டார். 2017ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட அவனியாபுரத்திலும், வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டில் எருமை மாட்டை அனுமதிக்கக் கோரி மனு

ABOUT THE AUTHOR

...view details