மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் கூறியதாவது, 'மதுரையில் நேற்று (ஜூன் 29) மேற்கொள்ளப்பட்ட 14,000 கரோனா பரிசோதனையில் 74 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள முன்மாதிரி
தற்போது இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் அலையையும் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் 3ஆம் அலையை எதிர்கொள்ள முன் மாதிரியாக பைலட் புராஜெக்ட் ஒன்றை உருவாக்க உள்ளோம்.
தடுப்பூசி செலுத்திய பகுதிகளில் 3ஆம் அலை வர வாய்ப்பு இல்லை
தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகள், முதியோர், இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 3ஆம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தடுப்பூசி செலுத்திய பகுதிகளில் 3ஆம் அலை வர வாய்ப்பு இல்லை. 'கோவின்' செயலி ஒன்றிய அரசால் இயக்கப்படுவது என்பதால், மாநில அரசிடம் தடுப்பூசி குறித்த எந்தவொரு தகவலும் இல்லை.
தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது