தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு..! - ரயில்

Tirunelveli to Mettupalayam Special Train: திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவையை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

tirunelveli to mettupalayam special train
tirunelveli to mettupalayam special train

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 9:51 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் வழியாகத் திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவையை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் மற்றும் மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை டிசம்பர் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் தற்போது, இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டு ஜனவரி மாதம் வரை இந்த சேவை செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) டிசம்பர் 31, ஜனவரி 07, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.

மேலும், மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்குத் திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை (டிசம்பர் 30) காலை 8 மணி முதல் துவங்க இருக்கிறது எனவும் தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:‘நம்ம படம் எடுப்போம் நண்பா..’ ராவுத்தர் பிலிம்ஸ் கம்பெனி உருவானதன் பின்னணியில் விஜயகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details