தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புல்லட் ரயில் வேகத்தில் நெல்லை - சென்னை வந்தே பாரத்.. 7.15 மணி நேரத்தில் சென்னையை அடைந்து சாதனை! - Etvbharat news in tamil

Vande Bharat Train: நெல்லையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்ற நேற்றைய சிறப்பு வந்தே பாரத் ரயில், வழக்கமான பயண நேரத்தை விட 1 மணி நேரம் குறைவாகப் பயணம் மேற்கொண்டு சென்னையை அடைந்து சாதனை படைத்துள்ளது.

நெல்லை - சென்னை வந்தே பாரத் இரயில்
நெல்லை - சென்னை வந்தே பாரத் இரயில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 3:55 PM IST

மதுரை: இந்தியா முழுவதும் உள்ள ரயில்வேக்களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த செப்டம்பர் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஓடக்கூடிய வகையில் 9 வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயிலுக்கு ரயில், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காகத் தென் மாவட்டங்கள் பயனடையும் வகையில், சிறப்பு வந்தே பாரத் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்திருந்தது. அந்த ரயில்களில் (வண்டி எண் - 06086) ஒன்று நேற்று (நவ.16) மாலை நெல்லையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயில் புறப்படும் அட்டவணை நேரம் பிற்பகல் 3 மணி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒன்றே கால் மணி நேரம் தாமதமாக 4.15 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. வந்தே பாரத் இரயில் வழக்கமாக நெல்லையிலிருந்து சென்னைக்கு 8 மணி 15 நிமிடங்களில் சென்றடையும். ஆனால் 7 மணி நேரம் 15 நிமிடங்களில் இலக்கை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில் ஆர்வலர் அருண் பாண்டியன் கூறுகையில், “ரயில் பாதை அனுமதி மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் ஆகியவை காரணமாக இந்த வேகம் சாத்தியமாகி உள்ளது. மதுரையிலிருந்து நேற்று மாலை 6.01 மணிக்குப் புறப்பட்ட நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் 5.30 மணி நேரத்தில் சென்னை சென்றடைந்து உள்ளது என்பது அசாத்தியமான வேகம் தான். ஆனால் மதுரை - சென்னை வந்தே பாரத் வழக்கமான பயண நேரம் 6.00 மணி நேரம்.

சராசரியாக மணிக்கு 98 கி.மீ வேகத்தில் பயணம் செய்து, 3.40 மணி நேரத்தில் நெல்லையிலிருந்து திருச்சிக்கு வந்துள்ளது. இந்த வேகம் மணிக்குச் சராசரியாக 98 கி.மீ ஆகும். வந்தே பாரத்தின் இந்த வேகம் என்பது நெல்லை - சென்னை, மதுரை - சென்னை மார்க்கங்களில் நிகழ்த்தப்பட்ட இதுவரை இல்லாத வேகம் என்றே கூறலாம். ஆனால் தற்போதுள்ள வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் இந்த வேகம் சாத்தியமில்லை.

காரணம், வந்தே பாரத்தின் இழுவைத்திறனும் மேம்பட்ட தொழில்நுட்பமும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. புல்லட் ரயில்களுக்கு இணையான வேகம் என்று சொன்னால் அது மிகையில்லை. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிக சாதுரியமாக இந்த ரயிலை இயக்கிய லோகோ பைலட்கள் கதிரவன் மற்றும் ரவி ஆகியோர் பாராட்டிற்குரியவர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஒரு அதிகாரிக்காக பாண்டியன் விரைவு ரயில் நடைமேடை திடீர் மாற்றம்? - எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details