தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் திருநெல்வேலி - காந்திதாம் சிறப்பு ரயில் இயக்கம்! - நாளை முதல் திருநெல்வேலி - காந்திதாம் சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை: நாளை முதல் திருநெல்வேலியிலிருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் வரை செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - காந்திதாம் சிறப்பு ரயில்  Tirunelveli - Gandhidham special train  Tirunelveli - Gandhidham  நாளை முதல் திருநெல்வேலி - காந்திதாம் சிறப்பு ரயில் இயக்கம்  Tirunelveli - Gandhidham special train service from tomorrow
Tirunelveli - Gandhidham special train

By

Published : Feb 3, 2021, 7:39 PM IST

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகேயுள்ள காந்திதாம் வரை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 09423 திருநெல்வேலி - காந்திதாம் அதிவிரைவு சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து பிப்ரவரி 4, 11, 18, 25 மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1, 8, 15, 22, 29 ஆகிய ஆகிய நாள்களில் (வியாழக்கிழமை) காலை 07:30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் பிற்பகல் 02.35 மணிக்கு காந்திதாம் சென்று சேரும்.

மறு மார்க்கமாக வண்டி எண் 09424 காந்திதாம் திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் காந்திதாமிலிருந்து பிப்ரவரி 8, 15, 22 மார்ச் 1, 8, 15, 22, 29 ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய நாள்களில் (திங்கள்கிழமை) அதிகாலை 04.40 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயில்கள் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், காயங்குளம், எர்ணாகுளம், திருச்சூர், ஷோரனூர், கோழிக்கோடு, மங்களூரு, கார்வார், ரத்தினகிரி, பன்வல், வாசனை ரோடு, சூரத், வடோதரா, அகமதாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், இரண்டு சரக்கு, காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:கோவை-ஜபல்பூர் இடையே சிறப்பு ரயில் சேவை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details