தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமங்கலத்தில் நோயெதிர்ப்பு மருந்து வழங்கிய நீதிபதிகள்! - ஹோமியோபதி மருந்து

மதுரை: திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 வைட்டமின் மாத்திரைகளை நீதிபதிகள் வழங்கினார்.

tablets for corona
tablets for corona

By

Published : Jun 16, 2020, 11:33 AM IST

கரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் கபசுரக் குடிநீர் மற்றும் ஹோமியோபதி நோயெதிர்ப்பு மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேணுகா குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண் ஆகியோர் பொதுமக்களுக்கு இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், வழக்குரைஞர்கள், ஹோமியோபதி பயிற்சி மருத்துவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details