மதுரை:பாண்டியன், வைகை மற்றும் பொதிகை ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாண்டியன் எக்ஸ்பிரஸ்: அதன்படி ஏப்ரல் 14 முதல் மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக இரவு 09.35 மணிக்கு புறப்படும். மேலும், இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.55, 10.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.00, 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 05.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
பொதிகை எக்ஸ்பிரஸ்: சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 03.10, 05.15, 05.35, 05.42, 5.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக அதிகாலை 03.05, 05.10, 05.30, 05.37, 05.53, காலை 06.07, 06.30, 06.43, 07.00, 07.30 மணிக்குப் புறப்படும். மேலும், இந்த ரயில் வழக்கமான நேரமான காலை 08.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.