தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்த அனுமதி... கட்டுப்பாடுகள் என்ன..? - Madurai High court

கோயில் திருவிழாக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்களில் நாடகங்களை நடத்த நேர தளர்வுகள் - உயர் நீதிமன்ற மதுரை கிளை!
கோயில் திருவிழாக்களில் நாடகங்களை நடத்த நேர தளர்வுகள் - உயர் நீதிமன்ற மதுரை கிளை!

By

Published : Jun 3, 2022, 3:22 PM IST

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்த கருப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவின்போது கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த தனி நீதிபதி, ஆடல் பாடல் நாடகங்கள் நடத்த நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கினார். அந்த நிபந்தனைகளில், “ஆடல் பாடல், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ அல்லது ஆபாச நடனங்களோ இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை நடத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மனுதாரர் தரப்பில், “கோயில் திருவிழாக்களின்போது நாடகங்கள் நடத்துவதற்கு இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை நடத்துவது சிரமம். இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (ஜூன் 3) நீதிபதிகள் ஜெயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கோயில் திருவிழாக்களின்போது நாடகங்களை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:'திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசினாலோ, ஆடினாலோ அம்புட்டுத்தேன்' - எச்சரித்த உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details