மதுரை:ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, ஆள்மாறாட்டம் செய்து பயணம் செய்வது, ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது போன்றவற்றைத் தடுக்க பயணச்சீட்டு பரிசோதகர் திடீர் சோதனை நடத்துவார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை மதுரை கோட்டத்தில் நடத்தப்பட்ட பயணச்சீட்டுப் பரிசோதனையில் ரூ.4.16 கோடி பயணக் கட்டண அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு பரிசோதனையில் அக்டோபர் 12ஆம் தேதி வரை சென்னை கோட்டம் ரூ.12.78 கோடியும், சேலம் கோட்டம் ரூ. 4.15 கோடியும், திருச்சி கோட்டம் ரூ.2.81 கோடியும் வசூல்செய்துள்ளன.
தெற்கு ரயில்வேயில் அக்டோபர் 12ஆம் தேதி மட்டும் 37 லட்சம் ரூபாய் பயணக் கட்டணம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அளவில் முகக்கவசம் அணியாத 32 ஆயிரத்து 624 பயணிகளிடமிருந்து ரூ.1.63 கோடி அபராதம் வசூல்செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் - தடுப்பணை கட்ட கோரிக்கை