மதுரை கூடல்புதூர் அருகேயுள்ள ஆனையூர் இமயம் நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ராகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
22 கிலோ கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது: 13 பேருக்கு போலீஸ் வலை! - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரை: கூடல்நகர் அருகே 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக 13 பேரை தேடி வருகின்றனர்.
Cannabis supplier arrested by police
அப்போது, இமயம் நகர் பகுதியிலுள்ள பிரதீப் என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போதைப் பொருளை பதுக்கிய பிரதீப், கண்ணன், சுதாகர் ஆகிய மூன்று பேரை கூடல்புதூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அதே வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 13 நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.