மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை அருகேயுள்ள பேச்சியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) இரவு கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் வளாகத்தில் இருந்த பிள்ளையார், பொன்னர்சங்கர் உள்ளிட்ட 3 ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திலகர் திடல் காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கெனவே மதுரை மாநகர் பகுதியில் கோயில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் பட்டியலை எடுத்து அதில், சந்தேகத்திற்குரிய செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தான்தான் சிலைகளை திருடியதாகவும், சிலைகளை அனுப்பானடி பகுதியிலுள்ள பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.