தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி இறந்த சோகம்... மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவர் தற்கொலை! - tamil news

மதுரை: ஆறு மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்த சோகத்தை தாங்க முடியாத கணவர், தனது இரு மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை
மதுரை

By

Published : Mar 3, 2020, 5:29 PM IST

மதுரை மாவட்டம் குமாரம் அருகே அரியூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்(42), லாரி ஓட்டுனராக பணியாற்றிவந்தார். இவருக்கு சுனில்(13), விமல்(9) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி இந்துமதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத சுந்தர், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், நேற்று இரவு வாழைப்பழத்தில் குருணை மருந்தை வைத்து இரு மகன்களையும் கொலை செய்துவிட்டு, தானும் மதுவில்விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவர் தற்கொலை

இதையடுத்து, அதிகாலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் விரைந்த காவல் துறை, வீட்டின் உள்ளே அனைவரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரே இரவில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டது அரியூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீரால் மாசு அடையும் ஏரி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details