தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி நிறுவனத்தில் நகைகளை திருடிய அலுவலர்கள் - இருவர் கைது, ஒருவர் தலைமறைவு

மதுரை: தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட 40 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற அலுவலர்கள் மூன்று பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

madurai
madurai

By

Published : Feb 8, 2020, 8:39 PM IST

மதுரை திருநகர் பகுதி அழகர் டவர்ஸ் கட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அலுவலர்கள் நவநீதன், ரவிக்குமார், காளிதாஸ் ஆகிய மூவரும் வாடிக்கையாளர்கள் பைனான்சில் அடகு வைத்த 40 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

தனியார் நிதி நிறுவனம்

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் நாகபிரபு திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் நவநீதன், ரவிக்குமார், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் நவநீதன், ரவிக்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். அதில் காளிதாஸ் என்பவர் தலைமறைவான நிலையில் காவல் துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போனில் பேசி நூதனக் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் - காவல் ஆணையர் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details