மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ளது குட்லாடம்பட்டி . இங்குள்ள அண்ணாமலையார் கோயிலில் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பழமை வாய்ந்த நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் உள்ளிட்ட மூன்று ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே மூன்று ஐம்பொன் சிலைகள் திருட்டு! - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரை : சிவன் கோயில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று ஐம்பொன் சிலைகள் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
three-idols-stolen-theft-from-madurai
இவை மூன்றும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை வழக்கம்போல் பூசாரி திருவேங்கடம் என்பவர் கோயிலைத் திறந்து பார்த்தபோது, கோயிலில் சிலைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக இதுகுறித்து வாடிப்பட்டி காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 44 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: ஒன்றிய அரசு உத்தரவு
Last Updated : Jun 9, 2021, 9:53 AM IST