தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு! - madurai news

மதுரை: சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோயிலில் மூன்று ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சியம்மன் படித்துறை  பேச்சியம்மன் கோயில் ஐம்பொன் சிலைகள் திருட்டு  மதுரை செய்திகள்  மதுரை ஐம்பொன் சிலை திருட்டு  madurai news  Petchiamman Temple idole theft
சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

By

Published : Aug 19, 2020, 3:49 PM IST

வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கியமான படித்துறைகளில் சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை ஒன்றாகும். இங்குள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த பேச்சியம்மன் கோயிலில் அய்யனார், பொன்னர் சங்கர், பிள்ளையார் ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் இருந்தன.

சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு!

நேற்றிரவு இந்தக் கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அம்மூன்று ஐம்பொன் சிலைகளையும் திருடிச்சென்றனர். சிலைகள் திருடப்பட்டது குறித்து பூசாரிக்கு காலையில் தெரியவர, திலகர் திடல் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகள்

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நூற்றாண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் சிம்மக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அம்மனின் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு: குற்றவாளிக்கு போலீஸ் வலை!

ABOUT THE AUTHOR

...view details