மதுரை பழங்காநத்தத்தில் 300ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான சாவடி ஒன்று உள்ளது. நாளுக்கு நாள் சாலைகளில் உயரம் அதிகமானதையடுத்து சாவடி மண்ணுக்குள் புதையும் நிலை உருவானது. இந்நிலையில், சாவடியைப் பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, அப்பகுதி மக்களின் பங்களிப்போடு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, சாவடியை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் தரை மட்டத்திலிருந்து ஆறரை அடிக்கு சாவடி உயர்த்தப்பட்டு வருகின்றது. 10 பேர் கொண்ட குழுவினரால் 200க்கும் மேற்பட்ட ஜாக்கிகளைப் பொருத்தி நடைபெறும் இப்பணிக்கு 25 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணியானது தற்போது முடிவு பெறும் நிலையில் இருப்பதால், கல் தூண்களின் இடையே பொருத்தப்பட்டிருந்த செங்கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.