தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tasmac:ஜல்லிக்கட்டுப்போட்டிகள்.. 3 நாள்களுக்கு டாஸ்மாக் மூடல்! - palamedu jallikattu

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

3 நாள்களுக்கு டாஸ்மாக் மூடல்
3 நாள்களுக்கு டாஸ்மாக் மூடல்

By

Published : Jan 14, 2023, 2:06 PM IST

மதுரை:அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாள்கள் என்பதால், அடுத்த மூன்று நாள்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள்களில், எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக இத்தகைய நடவடிக்கையை கையாண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் விமரிசையாக நடைபெறும் ஜல்லிக்கட்டினைக் காண, இந்த மூன்று நாள்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Good time for pongal:பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம் எது?: விளக்கமளிக்கிறார் பிரபல ஜோதிடர்!

ABOUT THE AUTHOR

...view details