மதுரை:திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை கட்டணம் செலுத்தாமல் பொலிரோ வாகனத்தில் மூவர் கடந்து செல்ல முயன்றனர்.அப்போது சுங்கக் கட்டணம் கேட்ட சுங்க சாவடி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கள் கைகளில் வைத்திருந்த ஏர்கன் மற்றும் கைத்துப்பாக்கியை காண்பித்து மிரட்டி உள்ளனர்.
இதைப்பார்த்த அருகில் இருந்தோர் சத்தம் போடவே மூவரும் மதுரை நோக்கி தங்களது வாகனத்தில் தப்பி சென்றுனர். இதுதொடர்பாக ராஜா என்பவர் திருமங்கலம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.