தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுகளை மாசுப்படுத்தினால் குண்டர் சட்டத்தில் கைதா? - மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை: ஆறுகளை மாசுப்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் ஏன் கைதுசெய்யக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 2, 2020, 2:14 PM IST

சுமார் 282 கிலோமீட்டர் தூரமுள்ள அமராவதி ஆற்றில், கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுநீரை கலக்கவிடுகின்றனர். அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் இந்தப் பிரச்சினை வாடிக்கையாக நடந்துவருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்தைச் சந்திக்க நேரிடுகிறது.

சாயக்கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாமாக முன்வந்து மனு தாக்கல்செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் கரூர் மாவட்டத்தில் எத்தனை சாயப்பட்டறைகள் உள்ளன? எத்தனை நிறுவனத்தின் சாயக் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது? சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் உள்ளதா? ஒவ்வொரு நிறுவனத்திற்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்கப்படுகிறது?

எவ்வளவு சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது? என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாவட்ட சட்ட உதவி மைய நிர்வாகிகள் நேரில் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்யவும் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details