மதுரை சமீபத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மதுபானங்களை பள்ளிகளுக்கு அருகே விற்றதாக தென்காசியைச் சேர்ந்த மகேஸ்வரி, தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் மேலூரைச் சேர்ந்த முரளி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இம்மூவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதிலும் நீதிமன்றம் விதிக்கக்கூடிய நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படுவதாகத் தெரிவித்து மூவரும் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட உத்தரவில், “தென்காசியைச் சேர்ந்த குற்றவாளியான மகேஸ்வரி, அந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கு ஒரு லட்சத்து 50 ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல் குற்றவாளி முரளி ஒத்தக்கடையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய் சானிட்டரி நாப்கின் இயந்திரம் வாங்கி கொடுக்க வேண்டும்.