தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை - Thiruparankundram Temple closed for corona in Madurai

மதுரை: கரோனா வைரஸ் காரணமாக திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை அனுமதி இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில்
திருப்பரங்குன்றம் கோயில்

By

Published : Mar 20, 2020, 10:44 PM IST

தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து முருகனின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் கோயில் இன்று காலை 8 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாக 12 நாள்களில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது இதுவே முதன்முறை என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டாலும், ஆகம விதிப்படி காலை முதல் இரவு வரை எட்டுக் கால பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில்

மேலும், கோயில் அறிவிப்பு பலகையில் கரோனா முன்னெச்சரிக்கை நடைவெடிக்கையாக பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கோவிட் 19 எதிரொலி: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details