கரோனா தொற்று அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எமன் வேடமிட்டு கரோனா விழிப்புணர்வு பரப்புரை
மதுரை: திருப்பரங்குன்றம் காவல்துறையினர் சார்பில் எமன் வேடமிட்டு கரோனா குறித்த விழிப்புணர்வு பரப்புரையை நூதன முறையில் மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காய்கறி மார்க்கெட் பகுதியில் இன்று (ஏப்.18) காலை திருப்பரங்குன்றம் காவல்துறை சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மூலம் எமதர்மன், சித்திர குப்தன் வேடமிட்டு பறையிசை மூலம் விழிப்புணர்வு பாடல்கள் பாடி கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.
மேலும் இந்த பரப்புரை, மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராமலிங்கம், திருப்பரங்குன்ற காவல்நிலைய காவல் ஆய்வாளர் மதனகலா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.