தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல்18ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்! - DMK Candidate Saravanan
மதுரை : நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் சரவணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம்
இதனையடுத்து வேட்புமனு தாக்கல் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் திமுக வேட்பாளர் சரவணன், தனக்கன்குளம் அருகே உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.