தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி - மாவட்ட ஆட்சியர் நாகராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அலுவல் பணிகளுக்கு பயிற்சி வகுப்புகளின் முதல் கட்ட பயற்சி முகாம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயற்சி முகாமில் 1504 கலந்து கொண்டனர்

By

Published : Apr 29, 2019, 8:35 AM IST

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு திருப்பரங்குன்றம் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், மண்டல தேர்தல் அலுவலர் பாரதி, ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர்.

பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில்,1,504 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 88 வாக்குச்சாவடிகளில் மத்திய காவல்படையினர் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகள் ஈடுபடவுள்ளனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயிற்சி முகாமில் 1504 கலந்து கொண்டனர்

பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்கு மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது' என கூறினார்

ABOUT THE AUTHOR

...view details