மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து அரக்கோணத்தில் சாதிவெறியர்களால் இரட்டைப் படுகொலை நடத்தப்பட்டது. அந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினிரிடம் அனுமதி பெறாமல், இந்த சம்பவத்திற்கு தொடர்பு இல்லாத நபரான சவுந்தரராஜனிடம் வாக்குமூலம் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக உடனடியாக புலனாய்வு விசாரணை தொடங்க வேண்டும். இந்த வழக்கை தமிழ்நாடு காவல் துறை விசாரிப்பதால் நீதி நியாயம் கிடைக்காது. எனவே மத்திய அரசின் புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும். இது திட்டமிட்ட சாதிய படுகொலை. அதற்கு இந்த தேர்தல் குறிப்பாக விசிக பானை சின்னத்தில் வாக்கு சேகரித்த நடவடிக்கை காரணியாக அமைகிறது.
தமிழ்நாட்டில் தான் சாதிய படுகொலை அதிகம் :
படுகொலையான நபர்களின் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்குவதோடு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடாத வகையில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பிற மாநிலங்களில் கூட கண்காணிப்பு குழு செயல்படுகிறது, ஆனால் தமிழ்நாட்டில் தவிர்க்கப்படுகிறது