தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவனின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் - முன்னாள் நீதிபதி ராமசாமி - Political news

இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை மீறி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனின் பதவியை சபாநாயகர் பறிக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதியும் மத்திய அரசின் சட்ட நிலைக்குழு உறுப்பினரான ராமசாமி தெரிவித்தார்.

சுமோட்டோ வழக்கில் திருமாவளவன் கைதாக வேண்டும் - பாஜக சட்ட நிலைக்குழு உறுப்பினர் ராமசாமி
சுமோட்டோ வழக்கில் திருமாவளவன் கைதாக வேண்டும் - பாஜக சட்ட நிலைக்குழு உறுப்பினர் ராமசாமி

By

Published : Dec 19, 2022, 10:43 AM IST

Updated : Dec 19, 2022, 1:53 PM IST

திருமாவளவனின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் - முன்னாள் நீதிபதி ராமசாமி

மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் சட்ட நிலைக்குழு உறுப்பினரும் முன்னாள் நீதிபதியுமான ராமசாமி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் கடந்த சில மாதங்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு எனவும், மனு ஸ்மிருதி என்ற நூலில் ஆர்எஸ்எஸ் என்பது இந்துத்துவா என்கிற சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் தொடர்ந்து பேசி வருவதாக எதிரப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

பாஜக சட்ட நிலைக்குழு உறுப்பினர் ராமசாமி செய்தியாளர் சந்திப்பு

இந்த நிலையில் ராமசாமி அவனியாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனது கட்டுப்பாட்டை மீறி இவ்வாறு பேசுவது தவறு. அவர் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த நவம்பர் 6 அன்று பாஜக சார்பில் புகார் அளித்தோம்.

அதற்கு தமிழ்நாடு காவல் துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அணுகினோம். தமிழ்நாடு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு இன்றைக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

அதில் திருமாவளவன் பேசியது மற்றும் மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் மற்றும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, அவர் மீது 24 மணி நேரத்தில் வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். திருமாவளவன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த பிறகு உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன்.

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள்தான். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா? திருமாவளவன் இந்திய சட்ட திட்டத்தின்படி தவறு செய்துள்ளார். மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின்படி ,சுமோட்டோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்ற சிறப்பு என்னவென்றால், நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாதி கலவரம் அல்லது மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்றம் 153ஏ, 153பி, 295ஏ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505இன்படி அவரை கைது செய்யவேண்டும். இதனால் 24 மணி நேரத்தில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்” என கூறினார்.

இதையும் படிங்க:தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், பாஜக வலிமை பெறக்கூடாது - தொல். திருமாவளவன்

Last Updated : Dec 19, 2022, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details