தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சமூக பதற்றத்தை ஏற்படுத்த மோடி முயற்சி செய்கிறார்’ - திருமாவளவன் குற்றச்சாட்டு! - Manipur riots

சமூக பதற்றத்தை ஏற்படுத்த மோடியும், அமித்ஷாவும் முயல்கிறார்கள் என மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளனர்.

thirumavalavan-said-that-modi-and-amit-shah-are-trying-to-create-social-tension-at-the-madurai-airport
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி

By

Published : Jun 30, 2023, 8:58 PM IST

மதுரை:சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 30) மதுரை வந்த விசிக தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் ரவி தான்தோன்றித்தனமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை துறையில்லாத அமைச்சரையில் பதவியில் இருந்து நீக்கியதற்கும் பின்னர் அவற்றை நிறுத்தி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் ஆளுநராக பதவி ஏற்ற நாள் முதல் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதும் திரும்ப பெறுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காத ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் வலியுறுத்துகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூர் கலவரத்தில் (Manipur riots) மணமக்கள் கொல்லப்படுகின்றனர். சொந்த மண்ணிலேயே அகதிகளாக புலம்பெயர்ந்து அம்மக்கள் கிடக்கின்றனர். இது ஒரு தேசிய பிரச்னையாக இருக்கும்போது, ராகுல் காந்தி அங்கு சாலை வழியாக சென்று அம்மக்களை சந்திப்பதை தடை செய்யும் சங் பரிவார் அமைப்பு (Sangh Parivar) வெறுப்பு அரசியலை தூண்டி விடுகின்றனர்.

இதேபோல், தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கை குறித்தும் கலந்தாய்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளது. இந்துக்களுக்காக தனி சட்டங்களும் வாரிசு உரிமை சட்டங்களும், சொத்து பிரச்னை குறித்த சட்டங்களும் நடைமுறையில் உள்ளன.

இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ள நிலையில், அது மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தனி சட்டங்கள் உள்ளதாகவும் கூறிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் இல்லாமல் தனி சட்ட அமைப்போடு தான் நம்மை இணைத்தார்கள்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி பெயர்களை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜக எந்த அளவிற்கு மாற்றம் அடைகிறது என்பதை பிரதமர் மோடியின் உரையிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் தடுக்க வேண்டும்; அவர்களை அச்சுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் திசைதிருப்பும் நடைவடிக்கையாக சங் பரிவார் அமைப்புகள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்” என விமர்சித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை இதிலிருந்து புலனாவதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து 'பாஜகவை வீழ்த்துவது' என்ற ஒரே இலக்கை முன்னிறுத்துவதுதான் இந்த எரிச்சலுக்கு காரணம் என்றார்.

சமூக பதற்றைத்தை ஏற்படுத்த முயல்கிறார்களா?: அதே நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பிற்காகவும், ஒட்டுமொத்த தேசத்தை பாதுகாப்பதற்காகவும் எதிர்க்கட்சிகள் போராடுகின்றனர் என்பதை அவர் அறியாமல் இல்லை என்றார். இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என வேறுபடுத்தி சமூக பதற்றத்தை ஏற்படுத்த மோடியும், அமித்ஷாவும் முயல்வதாகவும், இந்து பெரும்பான்மை வாதத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆதாயத்தை தேடி பாஜக, சங் பரிவார் அமைப்புகள் காய் நகர்த்துவதாகவும் விமர்சித்தார்.

பொது சிவில் சட்டம் ஏற்கனவே அரசியல் நிர்ணய சபையால் விவாதம் நடந்திருக்கிறது அம்பேத்கர் அதைப் பற்றி பேசி இருக்கிறார் திருமணம் மற்றும் வாரிசு ஆகியவை தவிர மற்ற அனைத்தும் எல்லா சமூக மக்களையும் வழிநடத்தக் கூடிய பொது சம்பவங்கள் தான் இருக்கின்றன.

மதசார்பற்ற அரசு மதசார்பின்மை தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மா அதற்கு எதிராக இந்திய அரசியலை பேசக்கூடிய சங்கர் அவர்கள் மக்களை பதட்டத்திற்கு உள்ளாக்குகிறார்கள். சிவில் சட்டம் என்ற விவாதம் பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி அமித்ஷாவாக இருந்தாலும் சரி பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் மக்கள் இதை முறியடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் அதன் அடிப்படையிலேயே மாண்புகளை கடைபிடிக்க வேண்டும் என திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க :தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

ABOUT THE AUTHOR

...view details