மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
‘பாஜகவின் மொழிக் கொள்கை மிகவும் ஆபத்தானது’ - திருமா - thirumavalavan
மதுரை: பாஜகவின் மொழிக் கொள்கை மிகவும் ஆபத்தானது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
![‘பாஜகவின் மொழிக் கொள்கை மிகவும் ஆபத்தானது’ - திருமா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4436870-thumbnail-3x2-thiruma.jpg)
அப்போது அவர் பேசுகையில், ‘ஒரே நாடு - ஒரே மொழி இருந்தால் மட்டுமே உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று அமித் ஷா கூறியிருப்பது ஆபத்தானது. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பாஜக அரசு இதனை முழங்கியபோதே விசிக எச்சரித்தது. மீண்டும் அதிகப் பெறுபான்மையுடன் ஆட்சியை பெற்றதும் தீவிரமாகச் செயல்படுகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலேயே அவர்களின் திட்டம் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
அதிமுக பேனர் சுபஸ்ரீ மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. தொடர்ந்து பேனர்கள் வைப்பதற்கு என பொதுவான நடைமுறை இல்லை. இதற்காக சட்ட வரையறை கொண்டு வரவேண்டும்’ என்று தெரிவித்தார்.