தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருமங்கலம் விவசாயிகளின் 40 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

மதுரை: குடிமராமத்து திட்டத்தின் மூலம் திருமங்கலம் பகுதி விவசாயிகளின் 40 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister-rb-udayakumar
minister-rb-udayakumar

By

Published : May 16, 2020, 5:08 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கால்வாய் தூர்வாரும் பணியின் பூமி பூஜை இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பணியைத் தொடங்கிவைத்தார். அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர், கரோனா வைரஸின் பேரிடரை சமாளித்து மக்களைக் காப்பதில் இன்றைக்கு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. திருமங்கலம் தொகுதி மக்களின் நாற்பதாண்டு கால கனவான திருமங்கலம் பிரதான கால்வாயில் வைகை தண்ணீரை கொண்டு வருவது இன்று நிறைவேறியுள்ளது.

அதற்காக ரூ.6 கோடி 47 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. விரைவில் திருமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை தண்ணீர் கொண்டுவரப்படும். அதற்காக எனது நன்றியினை தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தெரிவித்துக்கொள்கிறோன் என்றார்.

இதையும் படிங்க:‘கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் உருவாகும்’- அமைச்சர் காமராஜ்!

ABOUT THE AUTHOR

...view details