நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் ஆர்.பி. உதயகுமார், திமுக சார்பில் எம். மணிமாறன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எம். ராம்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கே. சாரல், அமமுக சார்பில் ஆதி நாராயணன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்! - மதுரை அண்மைச் செய்திகள்
மதுரை : திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
இந்நிலையில் இன்று (மே 2) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுகவினர் குற்றஞ்சாட்டினர். இது குறித்து தேர்தல் அலுவலரிடம் முறையிட்ட திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.