விஜயநகர பேரரசின் தொடர்ச்சியாக நாயக்கர்கள் மதுரையை கி.பி. 1529ஆம் ஆண்டு முதல் கி.பி. 1736ஆம் ஆண்டுவரை என 209 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். அவர்களுள் திருமலை நாயக்கர் குறிப்பிடத்தகுந்த மன்னராவார். இவரின் 437ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி தமிழ்நாடு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.