மதுரை: ரயில் நிலையங்களில் வாகன காப்பகங்கள் பராமரிப்பு, விளம்பரங்கள் செய்வது, கழிப்பறை பராமரிப்பு, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் அமைப்பது, ரயில்களில் பார்சல் போக்குவரத்து போன்ற சேவைகளுக்கு ரயில்வே வர்த்தக பிரிவு ஒப்பந்ததாரர்களை நியமித்து வருகிறது.
நேர்மையான வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தங்களை கையாள தற்போது ரயில்வேயில் மின்னணு ஏல முறை நடைமுறைக்கு வந்துள்ளது.இதற்காக ஒப்பந்ததாரர்கள் www.ireps.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
மேலும் இந்த இணையதளம் வாயிலாக என்னென்ன ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். மதுரை கோட்டத்தில் மேற்கண்ட சேவைகளுக்கு ஒப்பந்தங்கள் மின்னணு ஏல முறையில் கோரப்பட்டிருந்தது.