தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரங்களை பாதுகாக்க 2500 மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்! - மாணவ, மாணவிகள்

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில், நாட்டு நலப்பணித்திட்ட பணியில் ஈடுபட்ட மாணவ - மாணவிகள் மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி, 2500 மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாணவர்கள்

By

Published : Jul 3, 2019, 7:42 AM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் லயன்ஸ் மாவட்டம் ஆளுநர் முனைவர் பாரி பரமேஸ்வரன் ஏற்பாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் தலைமையில், பல்கலைக்கழக அலுவலர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து நாட்டு நலப்பணி திட்ட (NSS) மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் மாணவ மாணவிகளோடு பொதுமக்களும் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர். இந்த விழாவில், இயற்கை வளங்களை பாதுகாத்து வரும் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது மாணவ மாணவிகளின் கோரிக்கையாக வைக்கப்பட்டது.

மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்

மேலும், இதுபோன்று கடந்த ஆண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது நன்கு பராமரிக்கப்பட்டு செழிப்பாக வளர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details