தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி தேரோட்டம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடந்தது.

முருகன் கோயில் பங்குனி தேரோட்டம்
முருகன் கோயில் பங்குனி தேரோட்டம்

By

Published : Apr 1, 2021, 4:20 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாள்கள் கொண்டாடப்பட்டன.

இந்த விழாவின்போது முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும் மாலையில் தங்க மயில் வாகனம், குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சே‌ஷ வாகனம் உள்ளிட்டவற்றிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

நேற்று (மார்ச் 31) முருகப் பெருமான்-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முருகன் கோயில் பங்குனி தேரோட்டம்

இன்று (ஏப்ரல் 1) காலையில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் முருகன்-தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தேரில் எழுந்தருளினர்.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோ‌ஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதையும் படிங்க: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details