மதுரை ஜீவா நகர், மீனாம்பிகை நகர் பகுதியில் உள்ள தெருக்களுக்கு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியினை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ’பேனர், பிளக்ஸ் விவகாரத்தில் அதிமுக தலைமை சொல்வதைக் கேட்டு நடப்போம். எங்கள் கட்சியினர் இராணுவக் கட்டுப்பாடு நிறைந்தவர்கள். அரசு அலுவலர்களுக்கு இதுதொடர்பாக ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். ஆனால் ஒரு திருமணமோ, அரசு சார்ந்த திட்டம் தொடர்பாக விளம்பர பலகை வைப்பதில் தவறேதும் இல்லை. எங்களால் எந்தப் பிரச்னையும் வராத அளவிற்கு நடந்து கொள்வோம்.
பேனர் வைப்பதில் தவறு இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ - அரசு திட்டங்களுக்கு பேனர் வைப்பதில் தவறு இல்லை
மதுரை: திருமணமோ, அரசு திட்டம் தொடர்பாகவோ விளம்பர பேனர் வைப்பதில் தவறேதும் இல்லை என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், திறமையை வளர்க்கும் விதமாகவும் பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்பிலும் 8ஆம் வகுப்பிலும் பொதுத் தேர்வு எழுதுவதால் மேற்படிப்பிற்கு போட்டித் தேர்வுகள் எழுதும்போது அவர்களுக்கு தேர்வுகள் மீதான பயம் நீங்கிவிடும். இதனால்தான் பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ரூ.8000 கோடி முதலீடும், 37,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பெட்டிக்கடை போல முதலீடு விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. 4ல் இருந்து 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்தவர்கள் நிறுவனங்களை நிறுவ காலம் பிடிக்கும். அதனை விரைவாக நடைபெறும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.