மதுரை: ’’போத்தனூர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு பாலத்தின் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடப்பதால் ஏப்.28 மற்றும் ஏப்.30 ஆகிய இரு நாட்களில் மட்டும் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
மதியம் 12:15 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும் மதுரை - கோயம்புத்தூர் ரயில் (ரயில் எண்.16722) ஏப்.28 மற்றும் ஏப்.30 ஆகிய இரு நாட்களில் மட்டும் மதுரையில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூர் - கோயம்புத்தூர் இடையே ஏப்ரல் 28 மற்றும் 30 ஆகிய 2 நாட்கள் மட்டும் இயக்கப்படாது.