மதுரை: அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த குமார், தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக, இரு தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து காவல்நிலையத்தில் தற்போது வரை வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், குமார் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில் இரண்டுபேர் தலையில் தலைப்பாகை அணிந்தபடி எக்ஸ் எல் பைக்கில் வருவதும், அதன் பின்னர் இளைஞரின் வீட்டிற்குள் சென்று விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.