தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கு தயாராகும் மேடை - latest madurai district news

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கான தளம் அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

The stage is set for the azhagar vaigai landing event Chithirai festival
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கு தயாராகும் மேடை

By

Published : Mar 2, 2021, 3:59 PM IST

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளுதல் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. கரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்தாண்டு சித்திரை திருவிழா மட்டுமன்றி அனைத்து கோயில் திருவிழாக்களும் பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.

கரோனா பெருந்தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மதுரை சித்திரைத் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்த இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.

கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கான தளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது

வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் பகுதியில் நிரந்தர பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அப்பகுதியில் சித்திரைத் திருவிழாவிற்கான தளம் அமைக்கும் பணியை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொக்லைன் எந்திரம் மூலமாக செம்மண் கொட்டி மேடை அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முள்ளிப்பட்டி ஜல்லிக்கட்டு! - உயர் நீதிமன்றக்கிளை அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details