மலை அளவு உயர்ந்த மதுரை மல்லியின் விலை! - The price of Madurai coriander is Rs. 3,000 per kg
மதுரை : மலர் சந்தையில் பூக்களின் வரத்து பெருமளவு குறைந்ததாலும் கடும் பனிப் பொழிவின் காரணமாகவும் மதுரை மல்லியின் விலை கிலோ ரூபாய் மூன்றாயிரத்தைத் தொட்டுள்ளது.
![மலை அளவு உயர்ந்த மதுரை மல்லியின் விலை! மதுரை மல்லியின் விலை கிலோ ரூ.3 ஆயிரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9976040-thumbnail-3x2-mm.jpg)
மதுரை மல்லியின் விலை கிலோ ரூ.3 ஆயிரம்
மதுரை மலர் சந்தையில் பூக்களின் வரத்து பெருமளவு குறைந்ததாலும் கடும் பனிப்பொழிவின் காரணமாகவும் மதுரை மல்லியின் விலை எதிர்பாராத உச்சத்தைத் தொட்டுள்ளது.
மதுரை, மலர் சந்தை, மதுரை மற்றும் தென் மாவட்டங்களின் பூ உற்பத்தியாளர்களின் சரணாலயமாகும். மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பூக்கள் இங்கு அதிக அளவில் விற்பனைக்கு வரும்.