மதுரை:வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச சங்கர நாராயணன் (55). இவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவர் ஜூலை 2ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் திருச்சி சென்றார். அதன் பிறகு ஜூலை 3ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்து தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் கணேசன் என்பது தெரியவந்தது.