மதுரை - தத்தனேரி மின்மயானப்பகுதியை ஒட்டியுள்ள பாக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஆட்டோ, வேன், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களின் முன், பின்பக்க கண்ணாடிகளை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களாலும், செங்கற்களைக் கொண்டு அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தி அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அதனைத் தடுக்க வந்த பொதுமக்களையும் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் பயங்கர ஆயுதங்களால் வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.