தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே பாஸ் மூலம் பலமுறை மணல், கற்களை ஏற்றிச் சென்றால் லைசென்ஸ் ரத்து! - madurai latest news

ஒரே பாஸ்-ஐ பயன்படுத்தி லாரிகளில் பலமுறை கற்கள் ,மணல் ஏற்றிச் சென்றால் குவாரிகளின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என நெல்லை, குமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

stones-several-times-with-a-single-pass
stones-several-times-with-a-single-pass

By

Published : Sep 14, 2021, 4:44 PM IST

மதுரை : நாகர்கோவில் மண்டல கல், மணல் ஏற்றிச்செல்லும் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் டென்னிஸ்கோல்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், குவாரிகளில் இருந்து ஒவ்வொரு யூனிட் மணல், கற்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ள தொகையை நாங்கள் வரியுடன் செலுத்தி அவற்றை எடுத்து வருகிறோம்.

ஒவ்வொரு முறையும் லாரி ஏற்றிச்செல்லும் பொருளுக்கான அடையாள அட்டையை (பாஸ்) கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களின் கனிமவள அலுவலர்கள் வழங்குகின்றனர். இந்த அடையாள அட்டையில் கனிமவள அலுவலர்கள் சீல் வைத்து, குவாரியை சேர்ந்தவர்களிடம் கொடுத்துவிடுகின்றனர்.

அவர்களிடம் எங்கள் லாரி டிரைவர்கள் அடையாள அட்டையை பெற்றுச்செல்லும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த அடையாள அட்டையில் வண்டி எண், தேதி, நேரம், பயண நேரம், இடம் என அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும். லாரியில் ஒவ்வொரு நடைக்கும் தனித்தனியாக பாஸ் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் குவாரிகளில் இருந்து பொருட்களை எடுத்து செல்லும் குறிப்பிட்ட சில லாரிகளில், ஒரேயொரு பாஸ் மூலம் பலமுறை மணல், கற்களை ஏற்றிச்செல்கிறார்கள். இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பாஸ்களில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் எழுத வேண்டும் என ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவை முறையாக பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், மனுதாரர் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதி, குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகள், தங்களுக்கான பாஸ்களில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும். இதை அலுவலர்கள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். மீறும் குவாரிகளின் லைசென்சை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க : கடலில் தத்தளித்த மீனவர்கள் - உதவிக்கு வராத கடலோர காவல் படை

ABOUT THE AUTHOR

...view details