மதுரை: நாகர்கோயிலைச் சேர்ந்த சுயம்புலிங்கம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டுக்கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல்வேறு விதிகள் உள்ளன.
ஆனாலும், கல்வி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துநர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு அதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை தனியார் பள்ளிகளில் முறையாக, வாகனங்களைப் பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவனங்கள் விதிகளை முறையாகப்பின்பற்றவும் உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,