மதுரை: மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருமான பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மத்திய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இரண்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மதிப்பீட்டு முகாமை நடத்த ஏற்பாடு செய்தார்.
அதன் அடிப்படையில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்றார். அங்கு அமைச்சர், ஸ்மார்ட் போன்கள்,காது கேட்கும் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.