இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியக் குடியுரிமை பெற மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையாக வலுத்து வருகிறது.
அதேபோன்று மதுரை மகபூப் பாளையத்தில் உள்ள ஜின்னா திடலில் கடந்த 19 நாட்களாக சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இப்போராட்டம் குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் நிஜாம் அலி கான் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்காக பிரேத்யக பேட்டியளித்தார்.
அதில், "இந்தியா முழுவதும் 5ஆயிரத்து 444 இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தின் குறிக்கோள் மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே. குறிப்பாக தமிழ்நாடு அரசு சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றும் வரை இந்த போராட்டத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வரப்போவதில்லை.
போராட்டத்தில் பங்கேற்ற பெண் போராளி தமிழ்நாடு அரசின் சார்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாங்கள் சென்றிருந்தோம். போராட்டத்தை கைவிட கோரி அரசு தரப்பில் வலியுறுத்தினர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை" என்று அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்தோம் என்றார்.
இதையும் படிங்க:தனியார் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு - அரசு பேருந்து சிறைபிடிப்பு