தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி கர்ப்பிணி - மதுரை மாவட்டச் செய்திகள்

மதுரை: மகளிர் காவல் நிலையத்தில் 15 நாள்களாகியும் புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்வதாகக் குற்றஞ்சாட்டி மாற்றுத்திறனாளி கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சித்தார்.

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி கர்ப்பிணி
காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி கர்ப்பிணி

By

Published : Apr 10, 2021, 11:51 AM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாத்திமாமேரி மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்திருந்தார்.

இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்வதாகவும் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகார் அளித்து 15 நாள்கள் ஆகியும் மகளிர் காவல் நிலையத்தினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதப்படுத்தியதாகவும் இதனைக் கண்டித்து உடனடியாகத் தனக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு, மாற்றுத்திறனாளி கர்ப்பிணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், காவல் துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி உடனடியாகக் காப்பாற்றினர். இதனால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இச்சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் புகார்தாரர்களின் மனுக்களுக்கு உடனடியாகக் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details