தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.வி. சேகர் வழக்கு: பதில்மனு தாக்கல்செய்ய அவகாசம் - மதுரை அண்மைச் செய்திகள்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது தொடர்பாக, நடிகர் எஸ்.வி. சேகர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், பதில்மனு அளிக்க அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

எஸ்வி சேகர்
எஸ்வி சேகர்

By

Published : Sep 18, 2021, 8:27 AM IST

மதுரை: பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்றை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் 2018ஆம் ஆண்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகள், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு என நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.

பதில் மனு தாக்கலுக்கு அவகாசம்

இந்நிலையில் தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி, எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பாக இன்று (செப்டம்பர் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி. சேகர் தரப்பில், வழக்கை ரத்துசெய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாடிய அதிமுக

ABOUT THE AUTHOR

...view details