தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டு எல்லைக்குள் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா? -  நீதிமன்றம் கேள்வி - Health Department

தமிழ்நாட்டிற்குள் எல்லையோரம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

court
தமிழ்நாட்டில் பக்கத்து மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா

By

Published : Jan 10, 2023, 1:26 PM IST

மதுரை: தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கபட்டு மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. "இங்கிருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகிறது ஏன் இந்த நிலை? என கூறிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் எல்லையோரமாக உள்ள மாவட்டங்களுக்கு, பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறதா" என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தினர்.

இதையும் படிங்க: இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details