மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் 477 பயனாளிகளுக்கு ரூ. 61 லட்சம் மதிப்புள்ள மிக்ஸி, கிரைண்டர், தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் வாழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒளி ஏற்றியுள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த முதலமைச்சரின் கடிதத்தை மீன்வளத் துறை அமைச்சர் டெல்லிக்கு நேரில் சென்று வழங்கியுள்ளார் என்றார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆர்.பி. உதயகுமார் மக்களவையில் விஜய்க்கு ஆதரவாக திமுகவினர் பேசிய குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுகவினர் தாங்களாகவே சென்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்துவருவதாகவும் அதனை விஜய் ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பது குறித்து தனக்கு தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்வில் முதலமைச்சர் ஒளியேற்றியுள்ளார்- ஆர்.பி. உதயகுமார் தொடர்ந்து பேசிய அவர், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை திமுகவினரால் பாராட்ட முடியவில்லை. அதனால் வருமானவரித் துறை சோதனை குறித்து மட்டும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘பாதுகாகப்பட்ட வேளாண் மண்டலம்’ அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?